2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்




2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விருதும், ரூ.1 லட்சம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். இவ்விருது தொடர்பாக கீழ்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 1.4.2022 அன்று 15 வயது நிரம்பியவர்களாகவும், இந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2022-23) அதாவது 1.4.2022 முதல் 31.3.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும் (அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்).

விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும். அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக்கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கை விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 31-ந் தேதி மாலை 4 மணி ஆகும். இணையதளம் மூலம் விண்ணப்பித்தவுடன் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களுடைய சான்றிதழ்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரிடம் சான்றிதழ் சரிபார்ப்பதற்காக ஒப்படைக்க வேண்டும். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர் செல்போன் 7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments