வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிட தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு 11-ந் தேதி தொடங்குகிறது


புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வண்ணம் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்காலியிட அறிவிக்கை வெளியிடப்பட்டு 615 பணிக்காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இத்தேர்விற்கு புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வருகிற 11-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் அனுபவமிக்கவர்களும், இதுபோன்ற போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களையும் கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியின்போது பாடக்குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படும். மேலும் தொடர்ச்சியான இடைவெளிகளில் மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படும்.

 இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் விவரத்தினை 04322-222287 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது decgcpdktcoachingclass@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments