விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் 20-ந் தேதி கடைசி நாள்
விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 20-ந்தேதி ஆகும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

வீரர்கள் உதவித்தொகை பெற...

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் பின்வரும் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.

ஊக்கத்தொகை பெறுவதற்கான தகுதிகள், மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

20-ந் தேதி கடைசி

இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை வருகிற 20-ந் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். மேற்காணும் மூன்று திட்டங்களுக்கு கடந்த 30.11.2022 முதல் 22.12.2022 வரை ஏற்கனவே விண்ணப்பங்களை விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விபரங்களை ஏற்கனவே உள்ள தங்களுடைய பதிவெண் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம்.

மேலும் புதிய விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம். மேற்காணும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் தொடர்பு மையம் 9514000777 மற்றும் 7825883865 என்ற எண்களை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments