கடந்த நிதியாண்டில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் மூலம் ரூ.4½ கோடி வருவாய்!
கடந்த நிதியாண்டில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் மூலம் ரூ.4½ கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

பயணிகள் வருகை

புதுக்கோட்டை ரெயில் நிலையம் மிகவும் பழமையானதாகும். புதுக்கோட்டை வழியாக சென்னை, ராமேசுவரம், காரைக்குடி, புவனேஸ்வர், கோவை, செங்கோட்டை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது. புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வருகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. கொரோனா காலக்கட்டத்திற்கு பின் ரெயில் போக்குவரத்து சீரான பின்பு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

நீண்ட தூரம் செல்லக்கூடிய ஊர்களுக்கு ரெயில் பயணத்தையே பொதுமக்கள் தேர்வு செய்கின்றனர். டிக்கெட் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கடந்த 2022-2023-ம் நிதியாண்டில் புதுக்கோட்டை ரெயில் நிலையம் பயணிகள் மூலம் ரூ.4 கோடியே 58 லட்சத்து 62 ஆயிரத்து 189 வருவாய் ஈட்டியுள்ளது. இது புதுக்கோட்டை ரெயில் நிலையத்தின் அதிகபட்ச வருவாய் ஆகும்.

வருவாய் அதிகரிப்பு

கடந்த 2021-22 நிதியாண்டில் புதுக்கோட்டை ரெயில் நிலையம் வருவாய் பயணிகள் மூலம் ரூ.3 கோடியே 66 லட்சத்து 99 ஆயிரத்து 503 ஆகும். இதனை கடந்த 2022-23 நிதியாண்டின் பயணிகள் வருவாயுடன் ஒப்பிடும்போது ரூ.91 லட்சத்து 62 ஆயிரத்து 686 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த நிதியாண்டில் (2022-23) பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 11 ஆயிரத்து 979 என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் காலங்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments