தமிழ்நாட்டில் புற்றீசல் போல் பெருகிவரும் தனியார் பள்ளிகளுக்கு இடையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பல்வேறு திட்டங் களை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது.
அதன் வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபழஞ்சி ஊராட்சியில் தலைவராக இருந்து வருவவர் வன்னி செல்விமணி. இவர் அரசு பள்ளிகளில் தனது ஊராட்சிக்கு உட்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்த்தால் அவர்களுக்கு வீட்டு வரியில் சலுகை அளிக்கப்படும் என புதிய திட்டத்தை கடந்த மே ஒன்றில் ஊராட்சியில நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
இதன்படி தனது பயணப்படி மற்றும் அமர்வு படியை இதற்கு மூலதனமாக பயன்படுத்தி இந்த வீட்டு வரி சலுகையை அளித்திட உள்ளார். அனைவரும் வியக்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடபழஞ்சி ஊராட்சித் தலைவரின் இந்த முயற்சி பொதுமக்களிடையே மட்டும் இல்லாமல் ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.