கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் நூலகம்!




கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நூலகம் புதுப்பிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் அருகே நூலகம் இயங்கி வந்தது. இந்த நூலகத்தில் கோபாலப்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நூலகத்திற்கு சென்று படித்து பயன் பெற்று வந்தனர்.

3000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கோபாலப்பட்டிணம் கிராமத்தில் உள்ள மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை வளர்த்து கொள்ள நூலகம் மிக அவசியமானதாகும்.

நூலக கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து ஜன்னல்கள், கட்டிடங்கள் மோசமான நிலையில் காணப்பட்டது

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு  முன்பாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து கிராம  அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பழுது நீக்கப்பட்டு சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments