கோபாலப்பட்டிணத்தில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் நம்பர் 1 ரேஷன் கடை கட்டிடம்!





கோபாலப்பட்டிணத்தில்  நம்பர் 1 ரேஷன் கடை கட்டிடம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது .

ரேஷன் கடை கட்டிடம்

‌புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் கிராமத்தில் பெரிய பள்ளிவாசல் அருகே ரேஷன்கடை கட்டிடம் உள்ளது. இந்த ரேஷன் கடையில்  800-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மீமிசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த பழைய கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. 26 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி சேதமடைந்து சில பகுதிகள் இடிந்து விழுந்து பாதிப்பு அடைந்து இருந்தது.

இதனால் மழை பெய்யும் போது கட்டிடத்தின் மேற்கூரையின் உள்பகுதியில் தண்ணீர் கசிந்து உள்ளே இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சேதம் ஆகும் நிலை ஏற்பட்டிருந்தது.

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் கட்டிடம்

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நியாய விலைக் கடைகளை பொலிவுறச் செய்யும் திட்டத்தின் கீழ் கட்டிடங்கள் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் ஓவியங்கள் மக்களை கவர்ந்துள்ளது.

குறிப்பு : கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் அருகில் இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டிடம்! புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை என கடந்த வருடம் ஏப்ரல் மாதம் GPM மீடியாவில் செய்தியாக வெளியிடப்பட்டது  குறிப்படத்தக்கது.















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments