மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பேற்பு
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றி வந்த மணிவண்ணன், பெரம்பலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னையில் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் செயலாளராக பணிபுரிந்து வந்த மஞ்சுளா, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து கலெக்டர் கவிதா ராமுவை சந்தித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா வாழ்த்து பெற்றார். மேலும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து அவரிடம் எடுத்துக்கூறினார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரியாக ஏற்கனவே பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments