ஒக்கூர் கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைத்து தரக்கோரி சாலை மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஒக்கூர் கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செல்போன் கோபுரம்

ஆவுடையார்கோவிலில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் ஒக்கூர் கிராமம் அமைந்து உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் இங்கு செல்போன் சிக்னல் சரிவர கிடைக்காததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் அங்குள்ள கடைகள், இ-சேவை மையங்கள், பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு சரிவர இணைய வசதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் ஒக்கூர் கிராமத்தில் செல்போன் ேகாபுரம் அமைத்து தரக்கோரி நேற்று காலை 8 மணியளவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் முஜிபூர்ரஹ்மான் தலைமையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவா்த்தை நடத்தினர். அப்போது செல்போன் ேகாபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு செல்போன் கோபுரம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments