கோபாலப்பட்டிணத்தில் கொட்டும் மழையில் காட்டுக்குளத்திற்கு தண்ணீர் வர இளைஞர்கள் செய்த செயல்! குவியும் பாராட்டுக்கள்!!




கோபாலப்பட்டிணத்தில் கொட்டும் மழையில் காட்டுக்குளத்திற்கு தண்ணீர் வர இளைஞர்கள் செய்த செயலால் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுக்கா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டினத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் குளங்களான  நெடுங்குளம் மற்றும் காட்டுக்குளம் உள்ளது. இந்த இரண்டு குளங்களில் சில மாதங்களுக்கு முன் தண்ணீர் அனைத்தையும் வெளியேற்றப்பட்ட நிலையில் வரண்டு காணப்பட்டது.இதனால் மக்கள் குளிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் குளங்களில் தண்ணீர்  மெல்ல, மெல்ல நிரம்பியது. இதனிடையில் ஒரு நாள் அடைமழை பெய்ய தொடங்கியது. அப்பொழுது மழை நீர் அனைத்தும் குளத்திற்கு செல்ல வழியில்லாமல் கடலுக்கு சென்றது. இதனையடுத்து RSM.செய்யது இபுராஹீம் என்ற சமூக ஆர்வலர் தலைமையில்   கொட்டும் மழையில் இளைஞர்களை அழைத்துக்கொண்டு வீணாக கடலுக்கு செல்லும் மழைநீரை குளத்திற்கு செல்லும் வகையில் சொந்த பொருளாதாரத்தில் மணல் மூட்டைகளை கொண்டு அடைத்து மழைநீரை குளத்திற்கு செல்ல வழிவகை செய்து காட்டுகுளம் முழு கொள்ளளவை அடைய காரணமாக இருந்துள்ளனர். இந்த பணியை RSM.செய்யது இபுராஹீம் தலைமையில் உமர்கத்தா (எ) அசாருதீன், ஹாலித், முஸ்தாக் ஆகியோர் செய்தனர்.

மேலும் அதனை தொடர்ந்து நெடுங்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர்களால் குறைந்தளவு தண்ணீரே கொண்டு வர முடிந்தது. குறிப்பாக நெடுகுளத்திற்கு தண்ணீர் SP மடம் பகுதியில் உள்ள கோபாலப்பட்டிணத்தை சேர்ந்தவரின் கன்வாய் நிரம்பி பிறகு தான் நெடுகுளத்திற்கு தண்ணீர்  திறந்துவிடப்படும். இந்நிலையில் கன்வாயில் இருந்து திறந்து விடப்படும் பகுதி அடைக்கப்பட்டிருந்ததால் தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் கண்மாயில் இருந்து தண்ணீர் கொண்டு வர இளைஞர்கள் முயற்சி செய்துள்ளனர் ஆனால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கொண்டு வர முடியவில்லை என இளைஞர்கள் வேதனை அடைந்தனர்.   வாய்க்கால்களை முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் வருவதற்கு பல முயற்சியும்  எடுத்துள்ளனர்.

கொட்டும் மழையையும் மற்றும் இரவோடு இரவாக தன் உடல் உழைப்பையும், தன்  பொருளாதாரத்தையும் செலவழித்து காட்டுக்குளத்திற்கும், நெடுங்குளத்திற்கும் தண்ணீர் வர முயற்சி எடுத்து மக்கள் பயன்பெறும் வண்ணம் சேவைகள் செய்த சமூக சேவகர்களை பொதுமக்கள் மற்றும் GPM மீடியா சார்பாக மனதார பாராட்டுகிறோம். 

இது போன்ற நற்பணிகள் மட்டுமல்லாது அரசு மேல்நிலை பள்ளியில் பெண்களுக்கு புதிய கழிப்பறை கட்ட இந்த இளைஞர்கள் முயற்சியால் புதிய கழிப்பறை கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments