கேரளா படகு விபத்து.. குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி.. உருக்கமான தகவல்





திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 11 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைள் ஆசைப்பட்ட காரணத்தால் படகு சவாரி சென்று உயிரிழந்துள்ளனர்.


கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி உள்ள பரப்பனங்காடி பகுதியில் கடற்கரை இருக்கிறது. கடலும் ஆறும் சங்கமிக்கும் இடமான பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்காக படகு போக்குவரத்தும் இயக்கப்படுகிறது. நேற்று விடுமுறை என்பதால் பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

 
இந்த நிலையில்தான், நேற்று நசீர் என்பவருக்கு சொந்தமான படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் தான் பயணம் செய்ய அனுமதி உள்ள படகில் 40 பேர் வரை பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், அளவுக்கதிகமான பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்துள்ளது.

படகு அங்கும் இங்கும் ஆடியபடி தத்தளித்த போது படகில் இருந்த சுற்றுலாப்பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டுள்ளனர். ஆனால் அடுத்த நொடியே அந்த துயர சம்பவமும் நடைபெற்றது. கேரளாவில் நேற்று இரவு நடைபெற்ற இந்த படகு விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. விபத்து குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

படகு கிளம்பி அரை கி.மீ.தான் போயிருக்கும்.. கீழ் பகுதியில் சிக்கிய குழந்தைகள் அலறல்! ஐ விட்னஸ் தகவல்படகு கிளம்பி அரை கி.மீ.தான் போயிருக்கும்.. கீழ் பகுதியில் சிக்கிய குழந்தைகள் அலறல்!

அதேபோல், ரூ.10 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் அளித்துள்ளார். படகின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவு ஆகியுள்ள படகின் உரிமையாளர் நசீரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, இந்த விபத்தில் பலியான 22 பேரில் 11 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களின் மூதாதையர்கள் ஊருக்கு சென்ற குன்னும்மாள் சைதலவி என்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள், சொந்த ஊரில் விடுமுறையை கழித்துள்ளனர்.

அப்போது வீட்டுக் குழந்தைள் ஆசைப்பட்டதால் தூவல்தீரம் பகுதிக்கு நேற்று சைதல்வி அழைத்து சென்றுள்ளார். ஆனால் படகு பயணம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் இதையும் மீறி குழந்தைகள் ஆசைப்பட்டதால் படகு பயணத்தை மேற்கொண்டு இருக்கினனர். இறுதியில் இந்த துயரம் நடைபெற்றுள்ளது.

குன்னும்மாள் ஜஃபிர் மனைவி ஜல்சியா, குன்னும்மாள் சிராஜ் மனைவி மற்றும் குழந்தைகள் ஷம்னா, ஹஸ்னா ஷப்னா, சிராஜின் 10 மாத குழந்தை என ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments