குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே, சமுத்திரம் ஊராட்சி கரையப்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கரையப்பட்டி கிராமத்திற்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது. இந்த தார்சாலை முழுமையாக பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றது.
கரையப்பட்டி கிராமத்தின் வழியாகத்தான் நா.கொத்தமங்கலம், நாகரெத்தினபள்ளம், இசுகுப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும் தாஞ்சூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கரையப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மூலம் சென்று வருகின்றனர்.
நாற்று நட்டு போராட்டம்
மழைக்காலங்களில் சாலையின் நடுவே உள்ள பள்ளங்களில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் மேடு பள்ளம் தெரியாமல் மாணவர்கள் நிலைதடுமாறி விழுந்து விடுகின்றனர். அரிமளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக செல்லும் கர்ப்பிணிகள், முதியவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மழை நீர் தேங்கி நின்ற குண்டும், குழியுமான சாலையில் நாற்றுநட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் மாவட்ட கலெக்டரை அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.