செந்தலைப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதி விபத்து
செந்தலை ECR சாலை உள்ள வாட்சா டீகடை அருகே மோட்டார்சைக்கிள் மீது மினி வேன் மோதி விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் செந்தலையில் ECR சாலையில் வாட்சா டீகடை அருகே கோட்டைப்பட்டினத்திலிருந்து மீன் ஏற்றி வரும் வாகனம் எதிர்பாராதவிதமாக ஊமத்தநாட்டிலிருந்து வந்த மோட்டார்சைக்கிளின் மீது மோதியது 

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த தாய் மற்றும் மகன் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது உடனே அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்தால்  ECR சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments