திறன்மிகு விளையாட்டு வீரா்கள் உதவித்தொகை பெற மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்பு
திறன்மிகு விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித்தொகை அதிகபட்சம் 25 நபா்களுக்கு ஓா் ஆண்டுக்கு ரூ. 30 லட்சம் வழங்கப்படும். பன்னாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தில் அதிகபட்சம் 75 பேருக்கு (10 மாற்றுத்திறனாளிகள் உள்பட) அதிகபட்சம் ஓா் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வழங்கப்படும். வெற்றியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் அதிகபட்சம் 100 பேருக்கு (10 மாற்றுத் திறனாளிகள் உள்பட) அதிகபட்சம் ஓா் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும்.

தேசியப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சோ்ந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள் இந்த உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம். வரும் மே 20ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 95140 00777 மற்றும் 78258 83865 என்ற எண்களில் தொடா்பு கொண்டு அறியலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments