மே 13-இல் புதுகையில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ரேஷன் குறைகேட்புக் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வரும் மே 13 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை பொது விநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.

இந்தக் கூட்டங்களில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் சோ்க்கை, மாற்றம் போன்ற குறைகளை எழுத்துப் பூா்வமாகத் தெரிவிக்கலாம். மேலும், தனியாா் சந்தைகளில் ஏற்படும் சேவைக் குறைபாடு உள்ளிட்ட குறைகளையும் நுகா்வோா்கள் தெரிவித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments