அறந்தாங்கியில் ஆவின் பால் பண்ணை அமைத்திடுக: மஜக கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஆவின் பால் சேகரிப்பு மற்றும் விநியோகம் செய்யும் பால் பண்ணை அமைத்திட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகரில் பால் சேகரிப்பு மற்றும் விற்பனை பண்ணை செயல்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது நகரமான அறந்தாங்கி முப்பத்தி ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் 40 வேகத்தடைகள் இருப்பதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலான பயண தூரமாக இருக்கிறது. இந்நிலையில் கோடைகால வெயில் அதிகமாக அடிப்பதாலும் ஆவின் பால் அறந்தாங்கி வரும்போதே அல்லது வந்தபின் கெட்டுப்போகிறது. அதனால் ஆவின் பால் வாங்குவதில் பொதுமக்களும் விற்பனையாளர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே தனியார் நிறுவனங்களின் பால் அறந்தாங்கியில் ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய் அளவுக்கு ஆமோகமாக விற்பனை ஆகிறது. தமிழ்நாடு அரசின் தரமான ஆவின் பால் மக்களுக்கு சென்று சேரவில்லை.

அதேபோல அறந்தாங்கியை சுற்றி ஐநூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள இவற்றிலிருந்தும் பசும் பால்களை தனியார் பால் நிறுவனங்களே கொல்முதல் செய்து வருகின்றன. இதனால் இயற்கையாக அரசுக்கு வரவேண்டிய வருமானமும் வராமல் போகிறது. இந்நிலையை போக்க தமிழ்நாடு அரசு ஆவின் நிர்வாகம் அறந்தாங்கியில் ஒரு பால் சேகரிப்பு மற்றும் விற்பனை பண்ணையை அமைத்து சுற்று வட்டார பகுதிகளில் ஆவின் விற்பனை பூத்துகளையும் அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். அவர்தன் கோரிக்கையை தமிழ்நாடு அரசு தலைமை செயலகம், தமிழ்நாடு ஆவின் நிர்வாகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சித்தலைவர். அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமசந்திரன் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments