தமிழ்நாடு அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு குழுமம் மற்றும் வங்கித் தேர்வு குழுமம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு புதுக்கோட்டையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 25-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் 150 மாணவர்களுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள் 100 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் போட்டித் தேர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சிக்கான பாட நூல்கள் மற்றும் கையேடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பின் அங்கமாக 300 மணி நேர தனி வழிகாட்டல், 100-க்கும் மேற்பட்ட மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் விண்ணப்பிக்க கல்விதகுதி ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு 35 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி வகுப்புக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. இப்பயிற்சி வகுப்பில் விண்ணப்பிக்க கடைசி நாள் நாளை (சனிக்கிழமை) ஆகும். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.