சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கண்டெய்னர் லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் நண்பருடன், மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிங் மாணவர் விபத்தில் பலி

நண்பருடன், மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிங் மாணவர் விபத்தில் பலி
சேதுபாவாசத்திரம் அருகே நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிங் மாணவர் விபத்தில் பரிதாபமாக பலியானார்.

என்ஜினீயரிங் மாணவர்கள்

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகில் உள்ள வடுகன்குத்தகையை சேர்ந்தவர் வைரக்கண்ணு, இவரது மகன் கதிர்வேல்(வயது 20). இவரது நண்பர் பாப்பாநாட்டை அடுத்த ஆம்பலாபட்டை சேர்ந்த அன்பழகன் மகன் ஹனீஸ்(20).

இவர்கள் இருவரும் பட்டுக்கோட்டையை அடுத்த ராஜாமடத்தில் உள்ள அண்ணா என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர்.

மோட்டார் சைக்கிள்-கண்டெய்னர் லாரி மோதல்


நேற்று முன்தினம் மாலையில் இருவரும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மனோரா சுற்றுலா தளத்தில் கொண்டாடிய கல்லூரி விழாவில் கலந்து கொண்டு விட்டு மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஊர் திரும்பினர்.


வழியில் சின்னமனை என்ற இடத்தில் எதிரே மீன் லோடு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை கவனிக்காமல் தங்களுக்கு முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கதிர்வேல் பலியானார். ஹனீஸ் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments