மணமேல்குடி அருகே கோடியக்கரையில் மீனவர்களின் குழந்தைகளுக்கு கடல் பசு பாதுகாப்பு குறித்த பயிற்சி
இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை இணைந்து மணமேல்குடி கோடியக்கரையில் உலக கடல்பசு தினத்தையொட்டி மீனவர்களின் குழந்தைகளுக்கு கடல் பசு பாதுகாப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் 30 மீனவர்களின் குழந்தைகளை கொண்டு சிறிய துணியில் கை அச்சு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கடல்வாழ் உயிரினங்கள், கடல்பசுக்கள், கடற்பாசிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கடல்பசு பற்றி கேள்விகள் பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் கடல்களின் தேவதை கடல்பசு, கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் நமது பெருங்கடலைப் பாதுகாப்போம் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

தொடர்ந்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் இந்திய வனவிலங்கு நிறுவனத்தை சேர்ந்த ஸ்வேதாஐயர், அறந்தாங்கி வனச்சரக அலுவலர் மேகலா, இந்திய வனஉயிர் நிறுவனத்தை சேர்ந்த அஜித்குமார், பிரவீன், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், மணமேல்குடி வனஅலுவலர் அன்புமணி, சோனைமுத்து, வேட்டை தடுப்பு காவலர் முத்துராமன், இந்திய வனவிலங்கு நிறுவனம், புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை, கடலோர காவல் துறை, மீன்வளத்துறை, மற்றும் உள்ளூர் மீனவர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments