மீமிசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம விழா.!




மீமிசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2001-2008-ஆம் ஆண்டு மாணவர்கள் 15 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது குடும்பத்துடன் சந்திக்கும் சங்கம நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் முன்னாள் மாணவர் பான்டியராஜன் வரவேற்று பேசினார். அதை தொடர்ந்து மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளி அனுபவம் மற்றும் இப்பொழுது வேளையில் இருக்கின்ற அனுபவம் போன்ற மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தும் பகிர்ந்து கொண்டனர். மேலும் ஆசிரியர்கள் பழைய மறக்க முடியாத சில நினைவுகளை நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டனர்.

மாணவர்கள் பேசுகையில் பள்ளியின் விரிவாக்கம் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு தேவையான அனைத்தையும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்க வேண்டும் என்று உணர்ச்சிபூர்வமாக பேசினர். அதைத்தொடர்ந்து முன்னாள் ஆசிரியர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சத்திரம்பட்டினம் தலைவர் சின்னத்துரை, மீமிசல் கவுன்சிலர் ரமேஷ், தலைமை ஆசிரியர் ராமு, முன்னாள் தலைமை ஆசிரியர் காசிநாதன், சர்வேயர் சேகர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் KPP.பெரியசாமி உட்பட மற்ற உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலான்மை குழு உறுப்பினர்கள் மற்றும் இப்பள்ளியில் படித்து பல்வேறு துறை வேலைவாய்ப்புகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்கள் தங்கள் குழந்தைகள் உட்பட 130-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

ஆசிரியர்களுடன், முன்னாள் மாணவர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் குமாரவடிவேல் நன்றி கூறினார்.

இதில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்களான முகமது யூசுப், மெர்ஸ்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments