புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் இன்று (மே-29) மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்யவுள்ள பகுதியின் விபரம்!புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று மே 29 ஆய்வு செய்கிறார்.

மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் புதுக்கோட்டை மாவட்டத்தின் சுற்றுபயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.


29.05.2023 (திங்கள்கிழமை) காலை 9.00 மணி முதல் மதியம் 01.00 வரை பயண விவரம்:
  • புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணம் மீன்பிடி இறங்கு தளத்தை பார்வையிடுதல்,
  • புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டிணம் மீன்பிடி இறங்கு தளத்தை பார்வையிடுதல்
  • புதுக்கோட்டை மாவட்டம், புதுக்குடி மீன்பிடி இறங்கு தளத்தை பார்வையிடுதல்
  • புதுக்கோட்டை மாவட்டம், வடக்கு அம்மாபட்டிணம் மீன்பிடி இறங்கு தளத்தை பார்வையிடுதல்
மாலை 03.00 4.00
புதுக்கோட்டைமாவட்டக் கால்நடைப் பண்ணையை ஆய்வு செய்தல்.

மாலை 4.00
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற ஆணை பெற்றுத் தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் பொருட்டு அமைச்சர்களுடன் புதுகோட்டையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments