நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி சீதாலெட்சுமி ஊழலில் ஈடுபட்டுள்ளதாக கூறி நடவடிக்கை எடுக்க வேண்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்த சமூக ஆர்வலர்!ஊழலில் ஈடுபட்டுள்ளதாக கூறி நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி சீதாலெட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சமூக ஆர்வலர் நேரில் மனு அளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் சீதாலெட்சுமி என்பவர் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார். இந்நிலையில் கடந்த 16.05.2023 அன்று நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடும் கணவரை கண்டித்து ஊராட்சி மன்றத்திற்கு பூட்டு போட்டு குப்பை மற்றும் கழிவுநீரை கொட்டி கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பிற அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவி மீது ஊழல் குற்றச்சாட்டு, பொதுமக்கள் கொடுக்கும் மனு மீது நடவடிக்கை எடுப்பதில்லை, தரமற்ற முறையில் போடப்பட்டுள்ள சாலை, ஊர் முழுவதும் சூழ்ந்திருக்கும் குப்பைகள், தெருக்களில் நிரம்பி இருக்கும் சாக்கடைகள், எரியாத தெரு விளக்கு மற்றும் புதிய குடிநீர் குழாய் வழங்குவது, வீட்டு வரி ரசீது வழங்குவதில் ஊழல் என பல குறைகள் மற்றும் குற்றசாட்டுகளை முன் வைத்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் ஊழல் குறித்து தனி, தனி மனுவாக வழங்கினால் ஊராட்சி மன்ற தலைவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 26/05/2028 அன்று சமூக ஆர்வலர் முகமது ரியாஸ் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் குக்கிராமமான முத்துக்குடாவில் கண்மாய் இல்லாமலே கண்மாய் வேலை செய்து ஊழல் செய்த ஊராட்சி மன்ற தலைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு வரப்பட்ட கணினி ஊராட்சி அலுவலகத்திற்கு இல்லை அது தொடர்பாகவும், கோபாலபட்டிணத்தில் ஜல் ஜிவன் திட்டத்தில் தண்ணீர் குழாய் 130 வீட்டிற்கு போடாமலே போட்டதாக கூறி ஊழல் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோபாலபட்டிணத்தில் தரமற்று போடபட்ட தார் சாலை மற்றும் பேவர் பிளாக் சாலையை சீரமைக்க கோரி போன்ற புகார் குறித்து ஆவுடையார்கோவில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிஊ) அவர்களிடம் நேரில் மனு அளித்தார். 

மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) புகார் குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாக சமூக ஆர்வலர் முகமது ரியாஸ் கூறினார்.

கண்மாய் இல்லாத ஊரில் கண்மாயை தூர்வாரியதாக எடுக்கப்பட்ட பணம் 
நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ குட்கிராமம் முத்துக்குடாவில் கண்மாய் இல்லாமலே கண்மாய் வேலை செய்ததாக கூறி ஊழல் செய்த ஊராட்சி மன்ற தலைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி வழங்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி முத்துக்குடா குட்கிராத்தில் கடந்த 2020-2021 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் கண்மாய் இல்லாத ஊரில் கண்மாய் பணி நடந்ததாக 10,00,000 (பத்து இலட்சம் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கண்மாய் இல்லாத ஊரில் 12,18.336 (பன்னிரண்டு இலட்சத்து பதினெட்டாயிரத்து முன்னூற்று முப்பத்தி ஆறு பணி நடைபெற்றதாக பணிக்கு வராத நபர்க்கு ஊராட்சி மன்ற தலைவி மூலமாக வேலை வாய்ப்பு அட்டை பதிவு செய்யப்பட்டு, அரசு நிதியை முறைகேடு செய்த ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அதற்கு உறுதுணை புரிந்த அலுவலர் மீதும் நக்க விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கணினியை காணவில்லை
நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு வரப்பட்ட கணினி ஊராட்சி அலுவலகத்திற்கு இல்லை அது தொடர்பாக வழங்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி அலுவலகத்திற்கு 15 நாட்களுக்கு முன் கணினி வரப்பட்டது. ஆனால் இதுவரை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கணினி வரவில்லை. அந்த கணினி யார் வைத்திருப்பது என ஆராய்ந்து அலுவலகத்திற்கு வழங்கும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஜல் ஜிவன் திட்டத்தில் வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பை காணவில்லை 
நாட்டானிபுரசக்குடி ஊராட்சி கோபாலபட்டிணத்தில் ஜல் ஜிவன் திட்டத்தில் தண்ணீர் குழாய் 120 வீட்டிற்கு போடாமலே போட்டதாக கூறி ஊழல் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழங்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

ஐயா நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன்- நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலபட்டிணத்தில் வீடு இருப்பவர் இல்லாதவர். என 120 வீடுகளுக்கு தண்ணீர் குழாய் போடாமலே போட்டதாக கூறி 31 ஆண்டு இல் இவன் திட்டத்தில் பல லட்ச ரூபாய் ஊழல் செய்திருக்கிறார்கள்: கோபாலபட்டிணத்தில் 120 வீடுகளில் என் குடும்பத்தில் மட்டும் 5 பேர் அம்மா அப்பா அக்கா மச்சான் மற்றும் நாள் இதில் இருக்கும் பெயர்களில் எனக்கு மற்றும் எனது அக்கா ஆகிய இருவருக்கும் வீடு இல்லை அப்பறம் எப்படி தண்ணீர் குழாய் போட்டு இருக்க முடியும் இதைபோல் 120 வீடுகளில் வீடு இல்லாதவர் எத்தனையோ பேர் இருக்கலாம். 100 வீடுகளுக்கு தண்ணீர் குழாய் வழங்கபட்டதாக கூறிய நாலையும் இணைக்கிறேன் ஊழல் செய்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தரமற்று போடப்பட்ட சாலை
நாட்டாணியரசக்குடி ஊராட்சி கோபாலபட்டிணத்தில் தரமற்று போடபட்ட தார் சாலை மற்றும் பேவர் பிளாக் சாலையை சீரமைக்க கோரி வழங்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

ஐயா நான் மேற்கண்ட விலாசத்தில் வரிந்து வருகிறேன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தார் சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை தரமற்று மற்றும் வேலை முடியாமலே வேலை முடிந்ததாக கூறி பணத்தை பாஸ் செய்த ஊராட்சி மன்ற தலைவி சீதாலட்சுமி மற்றும் அவருடைய கணவர் பஷீர் ஆகிய இருவரும் ஊழல் செய்தது தெரிய வருகிறது ஆகவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்ற தலைவி மற்றும் ஊழலில் ஈடுபட உறுதுணையாக இருந்த அலுவலர் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற மக்கள் மற்றும் சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments