நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் மட்டுமே எல்லா கிராமசபை கூட்டங்களுக்கும் ஒரே அஜெண்டா! தமிழக அரசு வெளியிட்ட அஜெண்டாவை மக்களிடம் கொண்டு செல்ல தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்!நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் மட்டுமே எல்லா கிராமசபை கூட்டங்களுக்கும் ஒரே கூட்டுப்பொருள் (அஜெண்டா) வெளியிட்டு வருவதும்,  தமிழக அரசு வெளியிட்டுள்ள அஜெண்டாவை மக்களிடம் கொண்டு செல்ல தயங்குவது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் அமைத்துள்ளது தான் இந்த நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சியில் சீதாலெட்சுமி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்த ஊராட்சியில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் எதுவும் சரியாக செய்து கொடுக்கப்படுவதில்லை என்றும், ஊராட்சி நிர்வாகத்தில் கணவர் ஈடுபடுவதாக மக்கள் குற்றசாட்டுகின்றனர்.

இந்தநிலையில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் இன்று தொழிலார் தினமான மே.1 கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராமசபை நடைபெறும் இடம் மற்றும் விவாதிக்கப்பட உள்ள கூட்டப்பொருளை (அஜெண்டா) ஊராட்சி நிர்வாகம் சார்பில் துண்டு பிரசுரம் அடித்து  வெளியிடப்பட்டுள்ளது. இதில் இதற்கு முன்னர் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களுக்கு வெளியிடப்பட்ட ஒரே மாதிரியான கூட்டுப்பொருளை (அஜெண்டா) அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். அதில் பின்வருமாறு: குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பற்றி விவாதித்தல், கிராமவளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் - ஊரகம், இதர பொருள்கள் என அச்சிடப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு அரசு கிராமசபையில் விவாதிக்க வேண்டிய கூட்டப்பொருளை(அஜெண்டா) வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, 
 1. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல்,
 2. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல். சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல்,
 3. கிராம வளர்ச்சி திட்டம் (VPDP)
 4. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து விவாதித்தல்
 5. மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம். 
 6. பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம்,
 7. அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு. 
 8. பிரதம மந்திரி கிராம சாலை திட்டம்,
 9. தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்),
 10. ஜல்ஜீவன் இயக்கம்.
 11. தமிழ்நாடு மாநில ஊராக வாழ்வாதார இயக்கம், 
 12. நான் முதல்வன் திட்டம்
 13. இதர பொருட்கள்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறாக இதில் கூறப்பட்டுள்ள நிலையில் பழைய கூட்டப்பொருளையே (அஜெண்டா) அச்சிட்டு வருவது ஏன் என்றும் குறிப்பாக கிராமசபையில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனால் ஊராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள கூட்டுப்பொருளில் (அஜெண்டா) பொதுநிதி செலவினம் குறித்து விவாதிப்பது மற்றும் புதிய கூட்டுப்பொருள் (அஜெண்டா) இல்லாமல் இருப்பது சந்தேகத்தை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

எனவே இனி வரும் காலங்களில் நடைபெற உள்ள கிராமசபையில் அரசு வெளியிடும் கூட்டப்பொருளை(அஜெண்டா) அச்சிட்டு வழங்க வேண்டும் என்றும், அதே போன்று கிராமசபை நடைபெறுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர் கிராமசபை குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 

கிராமசபை குறித்த அறிவிப்பு கடந்த 29/04/2023 அன்று வெளியிடப்பட்ட நிலையில் துண்டு பிரசுரத்தில் 26/04/2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது போன்று அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

01/05/2023 கிராமசபை துண்டு பிரசுரம்

22/03/2023 கிராமசபை துண்டு பிரசுரம்

26/01/2023 கிராமசபை துண்டு பிரசுரம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Post a Comment

0 Comments