மீமிசல் பேருந்து நிலையத்தில் பேருந்து கால அட்டவணை வைக்க பயணிகள் கோரிக்கை!மீமிசல் பேருந்து நிலையத்தில் பேருந்து கால அட்டவணை வைக்க வேண்டி பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள சிறு நகரம் தான் மீமிசல் ஆகும். இந்த ஊரை சுற்றி அதிகமான குக்கிராமங்கள் உள்ளது. மேலும் மீமிசல் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், தொண்டி மற்றும் மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கு தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.வெளியூருக்கு சென்று வர சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினசரி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திசையன்விளை, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மீமிசல் பேருந்து நிலையத்தில் இருந்து நேரடியாக கிளம்புகின்றன. இது தவிர இராமேஸ்வரம், இராமநாதபுரம், ஏர்வாடி, சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், களியாக்கவிளை, நாகர்கோவில், திருவனந்தபுரம், வேதாரண்யம், தஞ்சாவூர், கும்பகோணம், வேளாங்கன்னி, நாகப்பட்டினம், நாகூர், சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் மீமிசல் வழியாகவே சென்று வருகின்றன. தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் மீமிசலை கடந்து செல்கின்றன.

இந்நிலையில் மீமிசல் பேருந்து நிலையத்தில் பேருந்து கால அட்டவணை வைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பேருந்துகள் வந்து செல்லும் நேரங்களை அறிந்து கொள்ள சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பயணிகள் வசதிக்காக பேருந்து கால அட்டவணையை பேருந்து நிலையத்தில் வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மீமிசல் அருகே உள்ள SP.பட்டினம் மற்றும் தொண்டி பேருந்து நிலையங்களில் பேருந்து கால அட்டவணைகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Post a Comment

0 Comments