கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் தொடர்ந்து மூன்றாவதாக நாட்களாக வெப்பத்தை தணித்து குளிர்வித்து வரும் கோடை மழை



 


கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில்  பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சிதோஷ்ண நிலை ஏற்பட்டது.

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. 

கடந்த சில நாட்களாக  காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. சுட்டெரித்த வெயில் காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில மூன்று நாட்களாக இரவில் வானில் கருமேகங்கள் திரண்டன. அதிகாலை முதல்    மழை பெய்ய தொடங்கியது.  அதன்பிறகு  மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது.

தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. நள்ளிரவு பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. மேலும் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஊரில் தொடந்து  மழை பெய்வதால் குளங்கள் நிறையுமா மக்கள் எதிர்பார்ப்பு!









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments