அறந்தாங்கியில் மஜக சார்பில் மேதின தொழிற்சங்க கொடியேற்றம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் நேத்தாஜி ஆட்டோ ஸ்டாண்டில் எம்.ஜே.டி.எஸ் தொழிற்சங்க கொடியேற்றி உறுதிமொழி ஏற்றனர்.

தொழிற்சங்க நேத்தாஜி ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் முகம்மது ராவுத்தர் தலைமையில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி தொழிற்சங்க கொடியை ஏற்றிவைத்தார். மாவட்ட அலுவலக செயலாளர் ரியாஸ் அகமது தொழிலாளர்கள் நலன் காக்க உறுதிமொழியை முன் மொழிந்தார். 

மாவட்ட துணை செயலாளர் செய்யதுஅபுதாஹிர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இறுதியில் நகர செயலாளர் ஜலாலுதீன் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments