கோபாலப்பட்டிணம்-மீமிசல் பகுதியில் அக்னி வெயிக்கு இதமாக குளு குளு மழை!! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள் .!கோபாலப்பட்டிணம்-மீமிசல் பகுதியில் அக்னி வெயிக்கு இதமாக திடீர் குளு குளு மழை பெய்து வருகிறது.

கோபாலப்பட்டிணம் மீமிசல் சுற்றுவட்டாரப் பகுதியில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மாநிலத்தில் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது.  குளிர்ச்சியான தட்பவெட்பம் நிலவி வருகிறது.இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். 

இந்த நிலையில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததாக கூறப்படுகிறது. தற்போது கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. வெயிலின் தாக்கம் தாங்காமல் தவித்து வந்த மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் தற்போது மழை பெய்து வருகிறது.இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. 
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments