புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி ஜூன் 15 ல் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல்!



புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டுவரும் வருவாய் கிராமக் கணக்குகளை ஒவ்வொரு வருடமும் அந்தந்த பசலியின் (வருடம்) இறுதி மாதத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், மற்றும் துணை ஆட்சியர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று, நடப்பு பசலி (1432) வருடத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழ்கண்ட அலுவலர்களால் 15.06.2023 முதல் 1432-ஆம் பசலிக்கான கிராமக் கணக்குகள் தணிக்கை செய்யப்படவுள்ளது.

1432-ஆம் பசலி ஆண்டு வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவரால் விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில், 15.06.2023 அன்று கொடும்பாளூர் உள்வட்டத்திற்கும், 16.06.2023 அன்று நீர்பழனி உள்வட்டத்திற்கும், 20.06.2023 அன்று விராலிமலை உள்வட்டத்திற்கும் வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலரால் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் 15.06.2023 அன்று காரையூர் உள்வட்டத்திற்கும், 16.06.2023 அன்று அரசமலை உள்வட்டத்திற்கும், 20.06.2023 அன்று பொன்னமராவதி உள்வட்டத்திற்கும் வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

புதுக்கோட்டை சிறப்பு மாவட்ட (நிலமெடுப்பு) (தே.நெ.) வருவாய் அலுவலரால், திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 15.06.2023 அன்று செங்கீரை உள்வட்டத்திற்கும், 16.06.2023 அன்று கீழாநிலை உள்வட்டத்திற்கும், 20.06.2023 அன்று கோட்டூர் உள்வட்டத்திற்கும், 21.06.2023 அன்று விராச்சிலை உள்வட்டத்திற்கும், 22.06.2023 அன்று திருமயம் உள்வட்டத்திற்கும் வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

புதுக்கோட்டை (நிலமெடுப்பு), (காவிரி குண்டாறு வைகை இணைப்புக் கால்வாய்த் திட்டம்), சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரால், ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 15.06.2023 அன்று வல்லநாடு உள்வட்டத்திற்கும், 16.06.2023 அன்று கீரமங்கலம் உள்வட்டத்திற்கும், 20.06.2023 அன்று வெண்ணாவல்குடி உள்வட்டத்திற்கும், 21.06.2023 அன்று ஆலங்குடி உள்வட்டத்திற்கும் வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலரால், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 15.06.2023 அன்று புதுநகர் உள்வட்டத்திற்கும் 16.06.2023 அன்று கல்லாக்கோட்டை உள்வட்டத்திற்கும், 20.06.2023 அன்று கந்தர்வகோட்டை உள்வட்டத்திற்கும் வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

இலுப்பூர் வருவாய் கோட்ட அலுவலரால், இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 15.06.2023 அன்று குடுமியான்மலை உள்வட்டத்திற்கும் 16.06.2023 அன்று சித்தன்னவாசல் உள்வட்டத்திற்கும், 20.06.2023 அன்று வீரப்பட்டி உள்வட்டத்திற்கும், 21.06.2023 அன்று இலுப்பூர் உள்வட்டத்திற்கும் வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

அறந்தாங்கி வருவாய் கோட்ட அலுவலரால், மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 15.06.2023 அன்று பெருமருதூர் உள்வட்டத்திற்கும், 16.06.2023 அன்று கோட்டைப்பட்டிணம் உள்வட்டத்திற்கும், 20.06.2023 அன்று சிங்கவனம் உள்வட்டத்திற்கும், 21.06.2023 அன்று மணமேல்குடி உள்வட்டத்திற்கும் வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

புதுக்கோட்டை உதவி ஆணையரால்(கலால்), கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், 15.06.2023 அன்று மழையூர் உள்வட்டத்திற்கும் 16.06.2023 அன்று கறம்பக்குடி உள்வட்டத்திற்கும் வருவாய் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரால் புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 15.06.2023 வாராப்பூர் உள்வட்டத்திற்கும், 16.06.2023 அன்று புதுக்கோட்டை உள்வட்டத்திற்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் 15.06.2023 அன்று அத்தாணி உள்வட்டத்திற்கும், 16.06.2023 அன்று நாகுடி உள்வட்டத்திற்கும், 20.06.2023 அன்று பூவத்தக்குடி உள்வட்டத்திற்கும், 21.06.2023 அன்று அரசர்குளம் உள்வட்டத்திற்கும், 22.06.2023 அன்று சிலட்டூர் உள்வட்டத்திற்கும், 23.06.2023 அன்று அறந்தாங்கி உள்வட்டத்திற்கும் வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

விராலிமலை குன்னத்தூர் கலால் மேற்பார்வை அலுவலரால் (கால்ஸ் புரூவரிஸ்(பி)லிட்) குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், 15.06.2023 அன்று நார்த்தாமலை உள்வட்டத்திற்கும்இ 16.06.2023 அன்று மாத்தூர் உள்வட்டத்திற்கும், 20.06.2023 அன்று கிள்ளுக்கோட்டை உள்வட்டத்திற்கும், 21.06.2023 அன்று குன்றாண்டார்கோவில் உள்வட்டத்திற்கும், 22.06.2023 அன்று கீரனூர் உள்வட்டத்திற்கும் வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

கந்தர்வகோட்டை கல்லாக்கோட்டை கலால் மேற்பார்வை அலுவலரால் (கால்ஸ் வடிப்பகம்(பி)லிட்,) ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் 15.06.2023 அன்று பொன்பேத்தி உள்வட்டத்திற்கும், 16.06.2023 அன்று மீமிசல் உள்வட்டத்திற்கும், 20.06.2023 அன்று ஏம்பல் உள்வட்டத்திற்கும், 21.06.2023 அன்று ஆவுடையார்கோவில் உள்வட்டத்திற்கும் வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

வருவாய்த் தீர்வாயம் குறிப்பிட்ட நாட்களில் காலை 10. மணிக்கு அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் துவங்கி நடைபெறும். வருவாய்த் தீர்வாய இறுதி நாளன்று குடிகள் கூட்டம் நடைபெறும். எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை மனுக்களை முதல்வரின் முகவரி இணைய தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments