விராலிமலை அரசு ஆண்கள் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!விராலிமலை அரசு ஆண்கள் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விராலிமலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்களது படிப்பை முடித்து அரசு மற்றும் தனியார் துறைகளில் அதிகாரிகளாகவும், தொழிலதிபர்களாகவும் வளர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 1992-1994 வருடங்களில் வரலாற்று பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் "92 - 94 வரலாற்று பிரிவு மாணவர்கள் " என்ற பெயரில் வாட்ஸ்-அப் குழு ஒன்றை ஏற்படுத்தி இப்பள்ளியில் படித்த மாணவர்களை ஒன்றிணைத்தனர். பின்னர் தாம் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் பாடம் சொல்லிக் கொடுத்து வாழ்க்கையில் முன்னேற்றிய ஆசிரியர்களுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னாள் வரலாற்று பாட மாணவர்களின் சங்கம நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற தமிழ் பேராசிரியர் சந்தானமூர்த்தி, வரலாற்று ஆசிரியர் துரைக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மாணவ-மாணவிகள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 

இந்த சந்திப்பின் மூலம் ஒவ்வொருவரும் பழைய நண்பர்களை சந்தித்து தங்கள் நிகழ்வுகளையும், சந்தோஷங்களையும் பகிர்ந்து கொண்டனர். பின்னர் தாங்கள் படிக்கும்போது பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். முன்னதாக வரலாற்று ஆசிரியர் பழனிச்சாமி வரவேற்றார். முடிவில் முன்னாள் மாணவர் சரவணன் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments