புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2002-2009 மாணவர்கள் 14 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது குடும்பத்துடன் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் பழைய மாணவர் தாமஸ் வரவேற்று பேசினார். அதை தொடர்ந்து மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளி அனுபவம் மற்றும் இப்பொழுது வேளையில் இருக்கின்ற அனுபவம் போன்ற மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தும் பகிர்ந்து கொண்டனர். மேலும் ஆசிரியர்கள் பழைய மறக்க முடியாத சில நினைவுகளை நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டனர்.
மாணவர்கள் பேசுகையில் பள்ளியின் விரிவாக்கம் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு தேவையான அனைத்தையும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்க வேண்டும் என்று உணர்ச்சிபூர்வமாக பேசினர். அதைத்தொடர்ந்து முன்னாள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த வருடம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயமும், பரிசும் முன்னாள் மாணவர்கள் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் பள்ளிக்கு தேவையான ஒளி பெருக்கியை முன்னாள் மாணவர்கள் வழங்கினார்கள்.
மேலும் முன்னாள் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவுக்கு சேகரகுரு பர்னபாஸ் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் மீமிசல் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், மீமிசல் கவுன்சிலர் ரமேஷ், முன்னாள் தலைமை ஆசிரியர் ராமு, முன்னாள் தலைமை ஆசிரியர் காசிநாதன், பெற்றோர் கழக தலைவர் KPP.பெரியசாமி உட்பட இந்த பள்ளியில் படித்து பல்வேறு துறை வேலைவாய்ப்புகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்கள் தங்கள் குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.
ஆசிரியர்களுடன், முன்னாள் மாணவர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் ரத்தினசபாபதி நன்றி கூறினார்.
இதில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்களான முகமது ராவுத்தர், சேனா என்ற செய்து முகமது, முகமது சித்திக், முகமது அப்துல்லா மற்றும் கலீல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.