மணமேல்குடியில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே செயல்படும் மதுபான கடையால் பொதுமக்கள் அவதி - நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை


புதுக்கோட்டை  மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அம்மா பேருந் து நிலையம் ஒன்று கடந்த 10 ஆண்டுகளாக கடை வீதியில் செயல்பட்டு வருகிறது, இந்த பேருந்து 
நிலையத்திற்கு அருகில் தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடை மற்றும் பார் செயல்பட்டு வருகிறது. 

டாஸ்மாக் கடையில் விற்கப்படும் மதுபானங்களை வாங்கி மது பிரியர்கள் பயன்பெறும் வகையில் அதற்கு அருகாமையிலே ஒரு பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது, 

டாஸ்மாக் கடைகள் செயல்படாத மற்ற நேரங்க ளி ல் இந்தமதுபான கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை படுஜோராக நடைபெறுவதாகவும், டாஸ்மாக் கடையில் வாங்கும் மதுபானங்கள்

அனைத்தையும் மதுப்பிரியகள் இந்த 
பேருந்து நிலையத்தில் வைத்து குடித்து 
வருவதாகும் குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போடுவதாலும் மேலும் அரை நிர்வாணத்தோடு படுப்பாதுலும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகை யில் 
இருப்பதால் இந்த பேருந்து நிலையம்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டதாக  பொதுமக்கள் வேதனை
தெரிவிக்கின்றனர்.

இது சம்பந்தமாக அந்த ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்  தெரிவிக்கும் போது , குளமாக இருந்த இடத்தில் ஊர் மக்களின் 
ஆதரவோடு கடந்த அதிமுக ஆட்சியில் 
பேருந்து நிலையமாக கொண் டு வந்தனர்  பேருந்துகளிலும் அவ்வபோது  வராததால் இந்த பேருந்து நிலையத்தில் 
குடிகாரர்கள் தங்களுடைய கூடாரமாக 
பயன்படுத்துகிறார்கள். 

மாலை 6 மணிக்கு இந்த பேருந்து நிலையத்திற்கு மாணவர்களும் , பெண்களும் வர அச்சப்பட்டு 
வராததால்,இந்த பேருந்து நிலையம் 24 மணி நேரமும் குடிகாரர்களின் பாராக செயல்பட்டு வருகிறது. மேலும் இது சம்பந்தமாக யாரேனும்  குறைதெரிவித்தால் குறை தெரிவிப்பவர்கள் மீது வழக்கு போடுவதாகவும் வழக்குகள் மூலம்
அவர்கள் அச்சத்தை அளிப்பதாகவும் சமூக நல விரும்பிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பேருந்து நிலையத்திற்கு அருகில் 
அறிவிக்கப்பட்டாத குப்பைமேடு போல
மணமேல்குடி பகுதியில் உள்ள அனைத்து குப்பைகளையும் கொட்டி துர்நாற்றம் வீசுகிறது, எனவே தமிழக அரசு போலியாக செயல்படும் பார்கள் மீது தமிழ்நாடு முழுவதும் விரைந்து நடவடிக்கை எடுக்கையில் மணமேல்குடியில் இது மாதிரி பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடையையும் பார் போன்றவற்றையும் அப்புறப்படுத்த  வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் 
சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments