சுட்டெரிக்கும் கோடை வெயில்: கோட்டகுப்பம் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு நீர் மோர் கொடுத்து அசத்தும் வார்டு கவுன்சிலர்!கோட்டகுப்பம் ரேஷன் கடையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு நீர் மோர் கொடுத்து அசத்தி வரும் வார்டு கவுன்சிலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோட்டக்குப்பம் நகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட சின்ன கோட்டகுப்பம் பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் ரேஷன் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு இலவசமாக நீர் மோர் கொடுத்து அசத்தும் நகர மன்ற உறுப்பினர் M. ஸ்டாலின் சுகுமார்.

மேலும், இந்த நீர் மோர் விநியோகம் 18-05-2023 முதல் 31-07-2023 வரை, ரேஷன் கடை திறந்திருக்கும் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் முற்பகல் 12 வரை நீர்மோர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


கடும் வெயிலில் அவதிப்படும் பொதுமக்களுக்கு தாகம் தணிக்கும் வகையில் சுமார் இரண்டு மாதங்களுக்கு நீர் மோர் விநியோகம் செய்யப்படுவது, அப்பகுதி மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments