மும்பை CSMT - தூத்துக்குடி இடையே வாரந்திர சிறப்பு ரயில் இயக்கம்



 


மும்பை - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் 26/05/2023 & 02/06/2023 மற்றும் 28/05/2023 & 04/06/2023 இயக்கப்படுகிறது.

மத்திய ரயில்வே சார்பாக மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினலில் இருந்து தாதர்,  கல்யாண், லோனோவாலா, புனே, தாவுந்த், சோலாபூர், கல்புர்கி, வாடி, ராய்ச்சூர், குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, திருத்தணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம் சந்திப்பு சிதம்பரம்  சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடிக்கும் அதே மார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கும் இரண்டு சேவைகள் சிறப்பு ரயில் இயங்க உள்ளது.



PC Credit : KMU Rail Users

01143 மும்பை CSMT - தூத்துக்குடி 

வெள்ளிக்கிழமை மதியம் 1.15 க்கு மும்பையில் புறப்படும் ரயில்  சனிக்கிழமை இரவு 11 மணிக்கு தூத்துக்குடிக்கு சென்று சேரும்

மும்பையில் இருந்து மே 26 மற்றும் ஜூன் 2 தேதிகளில் புறப்படும் 

01144  தூத்துக்குடி - மும்பை CSMT

மறுமார்கத்தில் தூத்துக்குடியில் இருந்து ஞாயிறு காலை 4 மணிக்கு புறப்படும் ரயில்,  மறுநாள் திங்கட்கிழமை மதியம் 3.40 க்கு மும்பை சென்று சேரும்

தூத்துக்குடியில் இருந்து மே 28, ஜூன் 4 தேதிகளில் புறப்படும் 

இந்த ரயில் செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருத்தணி வழியாக செல்வது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் உபயோகம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் சேவைகள் நீட்டிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது குறிப்படத்தக்கது 

குறிப்பு : தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்ல இருந்தால் இந்த ரயிலில் செங்கல்பட்டு வரை பயணம் செய்து பின்னர் புறநகர் ரயில் மூலமாக செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் சென்னை எழும்பூர் சென்னை புறநகர் & சென்னை சிட்டி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லலாம் 

தமிழ்நாட்டில்

திருத்தணி
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
கடலூர் துறைமுகம்
சிதம்பரம்
சீர்காழி
மயிலாடுதுறை
கும்பகோணம்
பாபநாசம்
தஞ்சாவூர்
திருச்சி
திண்டுக்கல்
மதுரை
விருதுநகர்
கோவில்பட்டி

ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெருவிக்கபட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments