சவுதி அரேபியாவில் மரணமடைந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சுகன்யாவின் உடலை தாயகம் அனுப்பி வைத்த சவூதி தமிழ் கலாச்சார மையம் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்



சவூதியில் மரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த பெண்ணின் உடலை  தாயகத்திற்கு சவூதி தமிழ் கலாச்சார மையம் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் அனுப்பி வைத்தனர்.

நாகை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, புதுப்பட்டிணம் பழையாறைச் சேர்ந்த 22 வயது சுகன்யா குணசேகரன் என்பவர் கடந்த மார்ச் மாதம் கடுமையான நிம்மோனியா நோயினால் பாதிக்கப்பட்டு நுரை ஈரல் பாதிப்பினால் மரணமடைந்து விட்டார். 

அவர் உயிருடன் மன்னர் அப்துல்லா மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போதே ரியாத்தில் வசிக்கின்ற சிவா அவர்கள் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் பக்ருதீன் இப்னு ஹம்தன் மூலம் சவூதி தமிழ் கலாச்சார மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், ஜெத்தா முத்தமிழ்ச் சங்க நிறுவனருமான ஜெம்ஸ் ஜாஹிர் ஹூஷேன் அவர்களை தொடர்பு கொண்டு உதவி கேட்க ஜாஹிர் அவர்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் ஜெத்தா மண்டலத் தலைவர் முனாஃப் அவர்களும் மருத்துவமனைச் சென்று மருத்துவர்களை சந்தித்து சுகன்யா அவர்களின் உடல்நலம் பற்றி விசாரிக்க மூளையில் ஏற்பட்ட கசிவினால் மூளை செயல் இழந்து விட்டதாகவும் பிழைப்பது மிக அரிது என்ற தகவல்களை அவரது குடும்பத்திற்கு தெரியப் படுத்தி அதற்குப் பின் இறந்துவிட்ட சுகன்யாவின் உடலை தாயகம் அனுப்பக்கோரி மயிலாடுதுறை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் நிர்வாகிகள் மாநில தலைமையின் மூலம் விண்ணப்பம் வைத்ததை தொடர்ந்து, சுமார் இரண்டரை மாதங்கள் போராடி நேற்று இரவு துபாய் வழியாக சென்ற சவூதி ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் எத்திஹாட் மூலம் உடல் தாயகத்திற்கு அனுப்பப்பட்டு நேற்று மே 20 சனிக்கிழமை மயிலாடுதுறை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகளின் உதவியுடன் அவரது குடும்பத்தினர் இறுதி காரியங்களை செய்தனர்.

இந்த செயல்களுக்கு காரணமாக இருந்த ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம், ஜெத்தா மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், மாநில தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகம், சவூதி தமிழ் கலாச்சார மையத்தின் நிர்வாகிகள் மற்றும் மயிலாடுதுறை தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமா அத் நிர்வாகிகள் உட்பட உதவிகள் செய்த அனைவருக்கும் சுகன்யாவின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி கூறினர். 

இறந்த சுகன்யாவின் குடும்பத்திற்கு அவர் வேலை செய்த முதலாளி மூலம் சுமார் ஒரு வருடத்திற்கு அவரது சம்பளத்தையும் பெற்றுத்தர அதனை அவரது தந்தையின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments