அம்மாப்பட்டிணத்தில் TNTJ சார்பாக நடைபெற்ற 10 நாள் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு!






அம்மாப்பட்டிணத்தில் TNTJ சார்பாக 10 நாள் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கடந்த 14.5.2023 முதல் 23.5.2023 வரை 10 நாட்கள் தங்கும் வசதியுடன் அம்மாபட்டினம் மர்கஸில் கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்றது இதில் சுமார் 104 மாணவர்கள் கலந்து கொண்டனர் மாணவர்களுக்கு அகீதா,சீரா, மசாயில் சட்டங்கள், துஆ மனனம், குர்ஆன் ஓத கற்றுக் கொடுத்தல், இஸ்லாமிய ஒழுக்கங்கள் மற்றும் இன்னும் பல பயனுள்ள வகுப்புகள் நடத்தப்பட்டது.





இறுதியில் 24.5.2023 செவ்வாய்க்கிழமை அன்று அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் கேடயம் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

நடத்தப்பட்ட தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

முதல் பரிசு 
முஹம்மது முஸ்தஃபா - அம்மாப்பட்டினம்

இரண்டாம் பரிசு 
முஹம்மது நியாஃப் - அம்மாப்பட்டினம்

மூன்றாம் பரிசு
முஹம்மது ஹிஷாம் - ரெத்தினக்கோட்டை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments