சேலத்தில் அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ்! இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து!! தூக்கி வீசப்பட்ட தாத்தா, பேரன்;சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தொளசம்பட்டியைச் சேர்ந்த முருகன் (60) என்பவர் தொளசம்பட்டி காந்தி சிலை அருகில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை தனது பேரன் மோனிஷ் (8) உடன் அருகிலுள்ள மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி கொண்டு மோனிசுடன் கடையின் வெளியே வந்த முருகன் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துகொண்டு சாலை கடக்க காத்திருந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரில் அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் பயங்கரமாக இருவர் மீதும் மோதி தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதில் முருகனுக்கு வலது கை, இரண்டு காலும் முறிவு ஏற்பட்டது. 8 வயது சிறுவன் மோனிசின் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் காது மற்றும் மூக்கில் இரத்தம் வழிய ஆரம்பித்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொளசம்பட்டி போலீசார் பொதுமக்கள் உதவியுடன் படுகாயமடைந்த இருவரையும் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது ஆம்புலன்ஸ் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments