வரத்து அதிகரிப்பால் கட்டுமாவடி மார்க்கெட்டில் நகரை மீன் கிலோ ரூ.100-க்கு விற்பனை..
மணமேல்குடியை அடுத்த கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. 
இந்த மீன் மார்க்கெட்டிற்கு நாட்டுப்படகு, விசைப்படகு ஆகியவற்றில் பிடிக்கப்படும் மீன்கள், இறால்கள் விற்பனைக்கு வருகிறது. விசைப்படகு மீனவர்கள் தற்போது தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

இந்தநிலலயில் கடந்த 2 நாட்களாக காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் கட்டிமாவடி பெரிய மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக வருகிறது. 

இதில் நகரை மீன் அதிகளவில் விற்பனைக்கு வருவதால் கிலோ ரூ.300 க்கு விற்ற நகரை மீன் தற்போது கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது. 

இந்த மீனை அசைவ பிரியர்கள் மற்றும் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments