கோட்டைப்பட்டினத்தில் வருகிற (ஜூன்.12) தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தை கண்டித்து நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ்!



கோட்டைப்பட்டினத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தை கண்டித்து அனைத்து இயக்கங்கள்,பொதுநல அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பில் வருகின்ற ஜூன்.12 நடக்க இருந்த சாலை மறியல் போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தை கண்டித்து SDPI,TMMK,MJK,KPM கூட்டமைப்பு மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் போரட்டம் வருகிற 12/06/2023 அன்று அறிவித்திருந்தனர். அதனையடுத்து மணமேல்குடி வட்டாச்சியர் தலைமையில் இன்று 10/06/2023) வட்டாச்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. 

இச்சமாதானக்கூட்டத்தில் போராட்டக்குழுவினர் சார்பாக 11 நபர்களும் வக்பு வாரியம் சார்பாக இரண்டு நபர்களும், கோட்டைப்பட்டினம் உதவி காவல் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர், கோட்டைப்பட்டினம் சரக வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

மணமேல்குடி வட்டாட்சியரால் வக்பு வாரியத்திற்கு அலைபேசி மூலம் தொடர்புகொண்டு மேற்படி இடங்களுக்கான புலஎண் மற்றும் உட்பிரிவு எண்களை சார்பதிவாளர் அலுவலகத்தில் பெற்று அதனை மட்டும் பத்திரபதிவு செய்திட தடைகோரியும் மற்ற இடங்களை பத்திரபதிவு தடையை நீக்கவேண்டியும் தெரிவிக்கப்பட்டது. ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனப்பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதாக தெரிவித்தனர்.


இதுகுறித்த செய்தி ஏற்கனவே GPM மீடியாவில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படிக்கு, 
TMMK, SDPI, MJK, KPM பொதுநல கூட்டமைப்பு மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து பொதுமக்கள், கோட்டைப்பட்டினம்

தகவல்: முகமது ராவுத்தர், கோட்டைப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments