அறந்தாங்கி திசைகள் 18ம் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா...




அறந்தாங்கி ஜூன்.28-புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் 18ஆம் ஆண்டு விழா மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, ராஜேந்திரபுரம் நைனா முகம்மது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
அறந்தாங்கி இந்திய மருத்துவ கழகம்  தலைவர் மருத்துவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.ஐஎம்ஏ முன்னாள் தலைவர் மருத்துவர் லெட்சுமிநாராயணன், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் கவிவர்மன், தமிழ் மாநில காங்கிரஸ், மாநில கொள்கை பரப்புச்செயலாளர் கராத்தே கண்ணையன், ஆவுடையார்கோயில் துணை வட்டாட்சியர் ஜபருல்லா, வணிகர் சங்கப் பேரவை மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் வரதராஜன், பாண்டி பத்திரம் பாரதநேசன் கணேசன், அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி தலைவர் விகாஸ் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திசைகள் அமைப்பின் பொருளாளர் முகமது முபாரக் வரவேற்புரையும், தலைவர் மருத்துவர் தெட்சிணாமூர்த்தி தொடக்க உரையும் ஆற்றினர்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிஞர் மற்றும் எழுத்தாளர் நீலா, பேராவூரணியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆறு. நீலகண்டன் மற்றும் ராட்சசி மற்றும் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படங்களின்  இயக்குநர் அறந்தாங்கியைச் சேர்ந்த கௌதம்ராஜ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடியைச் சார்ந்த மாணவர்களுக்கு மாணவர் விருதும், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 9 பேருக்கு ஆசிரியர் சிஜேஆர் மணி நல்லாசிரியர் விருதும், 10 பேருக்கு திசைகள் அப்துல்கலாம் இளம் சாதனையாளர் விருதும், 6 பேருக்கு திசைகள் குடும்ப சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.

காரைக்குடி மத்திய மின்வேதியல் ஆய்வக மூத்த விஞ்ஞானி ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினர். நைனா முகம்மது கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் முகமது பாரூக் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

அசிரியர் சேதுராமன், பீர் சேக், மணமேல்குடி வட்டார வள மேற்பார்வையாளர் சிவயோகம், கிரீன் முகமது, செலக்சன் மெட்ரிக் பள்ளி முதல்வர் சுரேஷ்குமார், விஸ்வம்மூர்த்தி, மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் முனைவர் முபாரக் அலி, பேராவூரணி மெய்ச்சுடர் வெங்கடேசன், முனைவர் சண்முகப்பிரியா, அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் கபார்கான், இயன்முறை மருத்துவர் விஜய் சிவானந்தம், முஜிபுர் ரஹ்மான், கர்ணா, ஆசிரியர் டார்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.செல்வக்குமார் தொகுப்புரையும், திசைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சேது புகழேந்தி நன்றியுரையும் ஆற்றினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments