கொல்கத்தா சாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில் விபத்து பலி எண்ணிக்கை 233 ஆக உயர்வு!!
ஒடிசா அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹனகா என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டது.

அதே நேரத்தில் மற்றோரு தடத்தில் வந்த யஷ்வந்தபூர் – ஹவுரா ரயில், தடம்புரண்டு விழுந்த பெட்டிகள் மீது மோதியது. இதில் ஹவுரா ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டது. விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் மற்றும் மீட்பு படையினர், தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமுற்ற 900-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நேரிட்ட பகுதி, வனப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும், மீட்பு பணியில் சற்றுதொய்வு ஏற்பட்டது.


விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் மொத்தம் 23 பெட்டிகளில் இவற்றில் 12 பெட்டிகளும் தடம்புரண்டுன. இந்த ரயிலில் பயணிக்க 869 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், இவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 200 பேர் பயணித்திருக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து கொள்வதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.


இதனிடையே இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் இருந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் தலைமையில் பணீந்தர் ரெட்டி, குமார் ஜயந்த், அர்ச்சனா பட்நாயக் ஆகிய 3 ஐஏஎஸ் அதிகாரிகள் குழு ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதிக்கு விரைந்துள்ளது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து தொடர்பாக நவீன் பட்நாயக்குடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க சிவசங்கர் மற்றும் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளார்.

விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் உயிரிழப்புகள் நிகழ்ந்ததோடு, பலரும் காயம் அடைந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிலரும் இதில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக தெற்கு ரெயில்வே அவசர உதவிக்கான எண்களை அறிவித்துள்ளது. அதன்படி, 044-25330952, 044-25330953 மற்றும் 044-25354771 என்ற எண்களில் விபத்து தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசியில் பேச்சு

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து குறித்து அறிந்த உடனேயே, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது தமிழக அரசு சார்பில் ஒடிசா அரசுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

உதவி எண்கள்

ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை தொடர்புகொண்டு விபத்து குறித்து கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரையும், 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறேன். உடனடியாக உதவி எண்கள் உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் விரைந்தார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ் நாட்டினருக்கு தேவையான உதவிகளை செய்ய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உடனடியாக ஒடிசா விரைந்தார்.

அவருடன் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணைய குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோரும் ஒடிசா விரைகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments