மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் NH (85) திருப்புவனம் சக்குடியில் இருந்து தொண்டிக்கு 4 வழிச்சாலை ரூ.1100 கோடியில் தயாராகும் திட்ட அறிக்கை




தொண்டி- - சிவகங்கை- சக்குடி (94.2 கி.மீ., துாரம்) பாலம் வரை ரூ.1100 கோடியில் நான்கு வழிச்சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மதுரை தெப்பக்குளத்தில் இருந்து சக்குடி வழியாக பூவந்தி, சிவகங்கை, காளையார்கோவில், சருகணி வழியாக தொண்டி வரையிலான ரோடு தேசிய நெடுஞ்சாலையாக (என்.எச்.,85) கடந்த காங்., ஆட்சி காலத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

ரோடு விரிவாக்க பணிகள், ரயில்வே கேட்களை அகற்றி மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு மதுரையில் இருந்து தொண்டி வரை போக்குவரத்து நெரிசலின்றி வாகன போக்குவரத்தை ஏற்படுத்தியுள்ளனர். வருங்காலத்தில் மத்திய பா.ஜ., அரசு தொண்டி துறைமுகத்தை விரிவாக்கம் செய்து, அதில் வர்த்தகபயன்பாட்டிற்காக நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்கான சாலை போக்குவரத்தை மேம்படுத்துவது முக்கியம் என கண்டறியப்பட்டுள்ளது.
94.2 கி.மீ., துாரத்திற்கு 4 வழிச்சாலை

மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் திருப்புவனம் அருகே சக்குடி பாலத்தில் இருந்து பூவந்தி, சிவகங்கை, காளையார்கோவில் வழியாக தொண்டி வரை 94.2 கி.மீ., துாரத்திற்கு ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகள் நடந்துவருகின்றன. சில ஆண்டுகளில் மதுரை --சிவகங்கை- தொண்டி -இடையே வாகனத்தில் அதிவேகமாக செல்லும் விதத்தில் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படும் என தெரிவிக்கின்றனர்.

ரூ.1100 கோடியில் திட்ட அறிக்கை

தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு ஒட்டு மொத்தமாக 45 மீட்டர் இடம் தேவை. இதில், தலா 9 மீட்டரில் வலது, இடது ரோடுகள் பிரிக்கப்படும். 1.5 மீட்டரில் சென்டர் மீடியன் அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது.

அதனை மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளோம். இதற்காக தோராயமாக ரூ.1100 கோடி வரை செலவாகும் என கணக்கிட்டுள்ளோம். நில எடுப்பு உள்ளிட்ட பணிகள் முடிய மூன்று ஆண்டாகும். அதற்கு பின் 4 வழிச்சாலை பணி தொடங்கும். இதில் தேவைப்படும் இடங்களில் பைபாஸ் ரோடும் அமைக்கப்படும், என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments