அறந்தாங்கி போக்குவரத்து பணிமனை முன்பு வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
அறந்தாங்கியில், பட்டுக்கோட்டை செல்கின்ற சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது. புதுக்கோட்டை அடுத்தபடியாக மிகப்பெரியது அறந்தாங்கி பணிமனை ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிமனை முன்பாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அறந்தாங்கி பணிமனை முன்பு வேகத்தடை இல்லை. இந்த பணிமனையில் வேலை செய்த அரசு ஊழியர் இளமுருகன் என்பவர் பணிமனையில் வேலை செய்துவிட்டு வெளியே வரும் போது, விபத்துக்குள்ளாகி அதே இடத்தில் இறந்துள்ளார். அதேபோல பல ஊழியர்கள் படுகாயமடைந்து வேலை செய்ய முடியாமல் வி.ஆர்.எஸ். கொடுக்கப்பட்டு வீட்டில் இருக்கின்றார்கள்.

 இந்த நிலையில் அடிக்கடி பணிமனை முன்பாக விபத்து நடக்கின்ற காரணத்தினால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தினம் தோறும் இரவு பகலாக வேலை செய்துவிட்டு வெளியே வரும் பொழுது, உள்ளே செல்லும் பொழுதும் விபத்துக்குள்ளாகி இறப்பதும், படுகாயமடைந்து வருவதும் தொடர்கதையாக இருந்து வருவதாக பணிமனை ஊழியர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே அரசு போக்குவரத்து துறை ஊழியர்களின் நலன் கருதி உடனடியாக அறந்தாங்கியில் இருக்கின்ற போக்குவரத்து பணிமனை முன்பாக வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments