சென்னை தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 40 பவுன் நகைகளை தவறவிட்ட நெல்லை பெண் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்


செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 40 பவுன் நகைகளை நெல்லையை சேர்ந்த பெண் தவறவிட்டார். அந்த நகைகளை ரெயில்வே போலீசார் மீட்டு அந்த பெண்ணிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

நெல்லை பெண்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி(வயது 45). இவர் கடந்த 4-ந் தேதி இரவு சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருநெல்வேலிக்கு பயணம் செய்தார். அவருடன் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த முகமது ஷெர்ஷா மகள் லூப்னா நாசரேத்(32) என்பவரும் பயணம் செய்தார்.

40 பவுன் நகைகளை தவற விட்டார்

அந்த ரெயில் பட்டுக்கோட்டை வந்ததும் லூப்னா நாசரேத் ரெயிலில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை நெல்லையில் இறங்கிய ஸ்ரீதேவி வீட்டுக்கு சென்று பார்த்தபோது 40 பவுன் நகை இருந்த தனது டிராவல் பேக் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

போலீ்சார் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், திருநெல்வேலி இருப்புப்பாதை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அவரிடம் விசாரித்த காவலர்கள் அந்த ரயிலில் அவர் பயணித்த முன்பதிவு இருக்கையில் சென்று ஆய்வு செய்தனர்.

அங்கு அவர் வைத்திருந்த பெட்டி போன்றே கருப்பு நிறத்தில் மற்றொரு ட்ராலி இருந்துள்ளது, ஆனால் அது அவருடையது அல்ல என்று கூறினார். இதையடுத்து திருச்சி இருப்புப்பாதை காவல்துறையினர் டிஎஸ்பி பிரபாகரனுக்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி.பிரபாகரன் ரயில்வே முன்பதிவு சாட்டினை வாங்கி ஸ்ரீதேவி பயணித்த முன்பதிவு பெட்டியில் உள்ள நபர்கள் குறித்து ஆராய்ந்து ஆய்வு செய்ததோடு ஒவ்வொருவரின் அலைபேசியையும் ஆராய்ந்தார். அவரது விசாரணையில் ஸ்ரீதேவிக்கு அடுத்து சீட்டின் பயணியை கண்டறிந்து அவரை தொடர்புகொண்டபோது, அந்த பெண்ணின் பெயர் லுப்னா நஸ் ரீத் என்பதும் அவர் பட்டுக்கோட்டையில் இறங்கிவிட்டார் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து டி.எஸ்.பி.,பிரபாகரன் திருவாரூர் இருப்புப் பாதை காவல்துறைக்கு தகவல் தர, அவர்கள் .பட்டுக்கோட்டை ரெயில்வே போலீசார், ஸ்ரீதேவியுடன் பயணம் செய்த 
பட்டுக்கோட்டை சுண்ணாம்புகாரத் தெரு, சீதமாணிக்கம் பிள்ளை நகரில் லூப்னா நாசரேத் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.

இதையடுத்து இவரும் கருப்பு நிறத்தில் ட்ராலி வைத்திருந்ததால் இருவரின் ட்ராலியும் மாற்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீதேவியை பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு மாலையில் வரவழைத்து, பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் முன்னிலையில் இருவரும் தங்கள் பெட்டிகளை மாற்றி எடுத்துக் கொண்டு சரிபார்த்தனர்.

தவறுதலாக எடுத்து சென்றார்

அப்போது அங்கு ஸ்ரீதேவியின் டிராவல் பேக் இருந்தது தெரிய வந்தது. அந்த பேக்கில் 40 பவுன் நகைகளும் பத்திரமாக இருந்தது.

லூப்னா நாசரேத் மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இருவரின் டிராவல் பேக்குகளும் ஒரே மாதிரி இருந்ததால் லூப்னா நாசரேத் ஸ்ரீதேவியின் பேக்கை தவறுதலாக மாற்றி எடுத்துச்சென்றது தெரியவந்தது.

திரும்ப ஒப்படைப்பு

இதைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்துக்கு ஸ்ரீதேவியை வரவழைத்து நகைகள் அடங்கிய டிராவல் பேக்கை அவரிடம் ஒப்படைத்தார்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவியும், அவருடைய கணவர் குமாரும் லூப்னா நாசரேத்துக்கும் பட்டுக்கோட்டை ரெயில்வே போலீசாருக்கும் நன்றி தெரிவித்தனர்.

ஸ்ரீதேவி கொண்டு வந்த நகைகள் கொண்ட பெட்டி லுப்னா நஸ்ரத் வீட்டிற்கு சென்றாலும் அதில் ஒரு துரும்புக்கூட மிஸ் ஆகாமல் அப்படியே இருந்ததை கண்டு அவர் ஆனந்தக் கண்ணீர் விட்டார். ஸ்ரீதேவி நஸரீத் மற்றும் காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். காவல்துறையினரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments