தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக சென்னை பயணிக்கும் ஹஜ் பயணிகளுக்கு ரயில்களில் சிறப்பு பெட்டிகள் ஒதுக்க வேண்டும்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக சென்னை பயணிக்கும் ஹஜ் பயணிகளுக்கு ரயில்களில் சிறப்பு பெட்டிகள் ஒதுக்க வேண்டும். தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் நவாஸ்கனி எம்பி வலியுறுத்தினார் 

இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான கே நவாஸ்கனி எம்பி விடுத்துள்ள கோரிக்கையில்,

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஹஜ் யாத்திரைகள் சென்னை பயணிக்க உள்ளனர்.

சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களில் ஹஜ் பயணத்தை தொடரும் ஹஜ் பயணிகள், சென்னைக்கு வருவதற்கு ரயில்களில் இருக்கை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

மிக குறைவான நாட்களில் ஹஜ் விமான தேதிகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளதால் முன்கூட்டியே முன்பதிவு செய்ய முடியாத நிலைக்கு ஹஜ் பயணிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

எனவே இதனை  கருத்தில் கொண்டு ஹஜ் பயணிகள் சிரமமின்றி சென்னை வருவதற்கு ஏதுவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வரும் ரயில்களில் சிறப்பு பெட்டிகளை ஒதுக்கி,  அதில் ஹஜ் பயணிகள் பிரத்தியேகமாக இருக்கைகளைப் பெற உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான கே நவாஸ் கனி எம்பி தெற்கு ரயில்வே மேலாளருக்கு விடுத்துள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments