இராமநாதபுரம் மாவட்ட மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகருக்கு சிறந்த உயிர்கோள காப்பகம் UNESCO மேலாண்மை விருது இந்தியாவிற்கு முதன் முறையாக இந்த விருது கிடைத்துள்ளது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பாராட்டு
சிறந்த உயிர்க்கோள காப்பக மேலாண்மைக்கான யுனஸ்கோ விருதை இந்தியாவில் முதன் முறையாக பெற்றுள்ள ராமநாதபுரம் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார்.

காரங்காடு மாங்குரோவ் காடுகள்
ஐக்கியநாடுகள் சபையின் யுனஸ்கோ அமைப்பு ‘மைக்கேல் பட்டீஸ்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் சிறந்த உயிர்க்கோள காப்பக மேலாண்மைக்கான விருதினை வழங்கி வருகிறது. 2004 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது, முதன் முறையாக இந்த ஆண்டு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.

பல்வேறு நாடுகள் இந்த விருதுக்காக விண்ணப்பித்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் காப்பாளரும், ஐ.எப்.எஸ் அதிகாரியுமான பகான் ஜெகதீஷ் சுதாகர் விருது பெற தேர்வாகியுள்ளார்.

கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் தனுஷ்கோடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை மையம், காரங்காடு, உப்பூர், மண்டபம், கீழக்கரை, குந்துகால் பகுதிகளில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மாங்குரோவ் காடுகள், கடலில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளுடன் கடல் பசுக்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மீனவர்கள், மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என 20 நாட்களில் 600 நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவை குறித்த முழுமையான தகவல்களுடன் யுனஸ்கோ நிறுவனத்திற்கு மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் சார்பில் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த விருது முதல் முறையாக இந்தியாவிற்கு கிடைத்துள்ளது

ஜூன் 14-ல் பாரிஸ் நகரில் நடைபெற உள்ள விழாவில் 12 ஆயிரம் டாலர் ரொக்க தொகை மற்றும் சான்றிதழுடன் கூடிய இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதினை தமிழகத்தின் மூலம் நாட்டிற்கு பெற்றுதந்துள்ள வனத்துறை அதிகாரி பகான் ஜெகதீஷ் சுதாகருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments