தொண்டி காரங்காடு, இராமேஸ்வரம் குருசடை தீவில் படகு இல்லம் சுற்றுலா பயணிகளை கவர திட்டம்




ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு, குருசடை தீவு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கடலுக்குள் படகு இல்லம், மிதக்கும் ரெஸ்டாரன்ட் அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

தொண்டி அருகே காரங்காடு சதுப்புநில காடுகளின் சொர்க்க பூமியாக உள்ளது. இங்கு கடலுக்குள் படகு சவாரியுடன் சுழல் சுற்றுலா மையம் செயல்படுகிறது.
ராமேஸ்வரம் அருகே குந்துகாலில் கடலுக்கு நடுவே குருசடை தீவு உள்ளது. இங்கு கடல் வாழ் உயிரினங்கள் நிறைய உள்ளதால் சுற்றுலா படகு சவாரி விடப்பட்டுள்ளது.

இந்த இரு இடங்களுக்கும் வெளி மாநிலம், நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக காரங்காடு பகுதியில் கடல் பசு, கடல் குதிரை, கடல் பாசி, வண்ண மீன்கள் உள்ளிட்ட கடல்சார் வன உயிரினங்கள் ஏராளமாக வாழ்கின்றன.

ராமநாதபுரம் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் சார்பில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திடும் வகையில் இரு பகுதிகளிலும் படகு இல்லம், மிதக்கும் ரெஸ்டாரன்ட் அமைக்க திட்ட மிட்டுள்ளது.

வனத்துறையினர் கூறியதாவது: காரங்காடு, குருசடை தீவு, உச்சிப்புளி அரியமான் கடற்கரை, ஏர்வாடி பிச்சமூப்பன் வலசை உள்ளிட்ட இடங்களில் சூழல் சுற்றுலா மையம் அமைத்து படகு சவாரி விடப்பட்டுள்ளது.

காரங்காடு, குருசடை தீவு பகுதிகள் படகு இல்லம், கடலுக்குள் ரெஸ்டாரன்ட் அமைக்க ஏதுவான இடங்களாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு படகு இல்லம் அமைக்க ரூ.75 லட்சம் செலவாகும். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு செலவு மட்டும் ரூ.15 லட்சமாகும்.

இதுதொடர்பாக திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்ப உள்ளோம், என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments