அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் 17 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற நிகழ்வு! ஹாஜிகள் பெருமிதம்!!
    தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ஆரம்பத்தில் மீட்டர் கேஜ் பாதையாக இருக்கும் ரயில் பாதையில் அதிகாலையில் 6 மணிக்கு சென்னையில் இருந்து அதிரை கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து, பின்னர் காரைக்குடி செல்வதும் மீண்டும் சென்னை டு அதிரைக்கு இரவு 8 மணிக்கு வந்து சென்னைக்கு செல்வதுமாக இருந்து வந்தது.

அப்பொழுது வருட வருடம் புனித ஹஜ்ஜுக்கு அதிராம்பட்டினத்தில்  இருந்து புறப்படும் பொழுது அதிகமாக அதிரையில் இருந்து இரயில் மார்க்கமாக சென்னை செல்வார்கள்,

அப்பொழுது அதிராம்பட்டினத்தில்  ரயில்வே ஸ்டேனுக்கு உறவினர்கள் மற்றும் பொது மக்கள் என புனித ஹஜ்ஜுக்கு செல்பவர்களை வழி அனுப்பி வைப்பதற்காக பெருங் கூட்டமாக வந்து நல்ல முறையில் வழி அனுப்பி வைப்பார்கள் அத்துடன் ரயில் வண்டி புறப்படும் பொழுது பாங்கு சொல்லி முடியும் வரையிலும் அனைவரும் அமைதியுடன் இருந்து பின்னர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வீட்டிற்க்கு செல்வார்கள்.

அதே போல் புனித ஹஜ்ஜை முடித்து சென்னையில் இருந்து ஊருக்கு வருகின்ற பொழுதும்
ஹாஜிகளை வரவேற்க அதிராம்பட்டினத்தில் ரயில்வே ஸ்டேஷனுக்கு அதிகாலையிலே பொது மக்கள் மற்றும் உறவினர்கள் என வரவேற்க வந்து விடுவார்கள்.

ரயில் வந்ததும் ஹாஜிமார்களை வரவேற்று அவர்களை சலவாத்துகளுடன்
ரயில்வே ஸ்டேஷனில் இருந்து (ஆண்) ஹாஜியார்களை புகாரி ஷரீப் நடைபெறும் ஜாவியா விற்க்கு நடைப் பயணமாக நடந்து வருவார்கள்!

குதிரை வண்டி சத்தங்களாக இருக்கும்.
(அதிராம்பட்டினம் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு!)

ஒவ்வொரு வருடமும் ஹஜ் கமிட்டி மூலம் செல்பவர்கள் சென்னையில் இருந்து தான் செல்வார்கள்.

ஆனால் கடந்த மூன்று வருடங்களாக  கேரளா மாநிலம் கொச்சின் விமான நிலையத்திலிருந்து தான் தமிழ் நாட்டில் உள்ள ஹாஜிகள் புனித ஹஜ்ஜுக்கு சென்றார்கள்.

அதிராம்பட்டினம் - சென்னை 

17 ஆண்டுகளுக்குப் பிறகு அதிராம்பட்டினத்திலிருந்து சென்னைக்கும் இரயிலில் ஹஜ் பயணம்  ஊர் மக்கள் வழியனுப்பி வைத்தனர்  .  

17 ஆண்டுகளுக்கு பிறகு அதிராம்பட்டினத்திலிருந்து  சவுதி அரேபியா மெக்கா நோக்கி 9/6/2023  வெள்ளிக்கிழமை மதியம் இராமநாதபுரம் - செகந்திராபாத்  வாரந்திர சிறப்பு ரயில் மூலம் சென்னைக்குப் பயணித்தனர்..

20க்கும் மேற்பட்ட ஹாஜிகள் மற்றும் அவர்களை வளியனுப்பிவைக்க 100 க்கும் அதிகமானோர் வழியனுப்பு நிகழ்ச்சியில் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை கலந்துகொண்டு சிறப்பித்தனர்

உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் புனித ஹஜ்ஜுக்கு செல்பவர்களை சிறப்பாக வழியனுப்பிவைத்தும், ரயில் புறப்படும் பொழுது பாங்கு சொல்லியும் வழியனுப்பி வைத்தது மிக சிறப்பு!!நீண்ட இடைவெளிக்கு பிறகு நடைபெற்ற நிகழ்வு!

ஆங்காங்கே பாங்கு சத்தங்களால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது! அதிரை வரலாற்றில் ஓர் ஏடு!!

அகலப்பாதையாக மாற்றம் செய்து அதிரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தலைநகர் சென்னைக்கு சிறப்பு தொடர் வண்டியில் புனித ஹஜ்ஜுக்கு செல்லுவது 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நினைவூட்டல்களாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது!! 

அதிராம்பட்டினம் - எர்ணாகுளம் 

கடந்த வருடம் 12-06-2022 அதிராம்பட்டினத்தில் இருந்து புனித ஹஜ்ஜுக்கு செல்லும் குழு வேளாங்கண்ணி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் சிறப்பு தொடர் வண்டியில் அதிரையில் இருந்து கொச்சின் சென்றார்கள் குறிப்படத்தக்கது 

அதிராம்பட்டினம் மக்களின் கோரிக்கை

அதிராம்பட்டினம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகக் காரைக்குடி முதல் சென்னை வரை தினசரி இரவு நேர எக்ஸ்பிரஸ் சேவையைத் துரிதமாக இயக்க வேண்டும்.

இதுபோன்று தினசரி இராமேஸ்வத்தில் இருந்து சென்னைக்குக் பகல் நேரத்தில் எக்ஸ்பிரஸ் சேவையை  துவக்க வேண்டும் என்றும் 

அதிராம்பட்டினம் பகுதியில் தினசரி மீன்,கருவாடு, மற்றும் உப்பு ஏற்றுமதியில் அதிகமான வருவாய் கடந்த காலங்களில் ஈட்டி தந்துள்ளது  

அதிகமான வருவாய் கொண்ட அதிராம்பட்டினத்தில் தாம்பரம் செங்கோட்டை எக்ஸ்பிரஸ்  ரயில் நிறுத்தம் இல்லாதது  இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது 

எனவே தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் ரயில் அதிராம்பட்டினத்தில் இருமார்க்கத்தில் நின்று செல்லும் வேண்டும் என்று அதிராம்பட்டினம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.PC & News Credit:Adirai Faiz & Zabeer  

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments