SDPI கட்சியின் சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான விருது பெற்ற பொண்ணமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் இக்பால்




SDPI கட்சியின் சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான விருது  பொண்ணமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் இக்பால் பெற்றார்.

கடந்த ஞாயிற்றுகிழமை (04.06.2023) அன்று SDPI கட்சியின் தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில்  நடைபெற்றது.

SDPI கட்சியின் தஞ்சை மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி மற்றும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸ்ருதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்சியில் "உள்ளாட்சியில் ஒரு நல்லாட்சி" என்ற தலைப்பில் உள்ளாட்சியில் சிறப்பாக செயல்படும் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. 

அதன்படி சிறப்பாக செயல்பட்டு அரசிடமிருந்து பல நல திட்டங்களை பெற்று பொன்னமங்களம் ஊரட்சியை செலிப்பான ஊரட்சியாக மாற்றிக்கொண்டிருக்கும் பொன்னமங்களம் ஊராட்சி மன்ற தலைவரும் SDPI கட்சி புதுக்கோட்டை‌ கிழக்கு  மாவட்ட பொருளாளருமாகிய முகமது இக்பால் அவர்களுக்கு சிறந்த ஊரட்சி மன்ற தலைவருக்கான விருது வழங்கப்பட்டது.

விருது பெற்ற  மாவட்ட பொருளாளருக்கு வாழ்த்துக்களையும் 
அவர் பணி மென்மேலும் சிறக்கவும் Sdpi புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக வாழ்த்தினார்கள்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments