நாகூர் விழாவை முன்னிட்டு சென்னை தாம்பரம் - காரைக்கால் இடையே சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு      
சென்னை தாம்பரம்  தாம்பரம் - காரைக்கால் இடையே ஜூன் 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை தாம்பரத்தில் இருந்து காரைக்காலுக்கு சிறப்பு விரைவு ரயில் (06045) ஜூன் 21-ஆம் தேதியும், மறுமாா்கத்தில் காரைக்காலில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு விரைவு ரயில் (06046) ஜூன் 22-ஆம் தேதியும் இயக்கப்படவுள்ளது.

தாம்பரத்தில் இருந்து ஜூன் 21-ஆம் காலை 8.15 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் பிற்பகல் 3.50 மணிக்கு காரைக்கால் சென்றடையும். 

மறுமாா்கத்தில் ஜூன் 22-ஆம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

சிறப்பு விரைவு ரயில், 

செங்கல்பட்டு சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, கடலூா் துறைமுகம் சந்திப்பு, சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை சந்திப்பு, திருவாரூா் சந்திப்பு, நாகப்பட்டினம் சந்திப்பு, நாகூா்  ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments