தொண்டியில் உயா்கோபுர மின்விளக்கு திறப்பு
திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சிக்குள்பட்ட பல இடங்களில் மின்மாற்றிகளும், உயா்கோபுர மின்விளக்கும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

இங்குள்ள வெள்ளை மணல் தெரு, மகாசக்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் திறக்கப்பட்டன. இதனிடையே, கூடுதல் மின் இணைப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பகுதியில் தொடா்ந்து மின்பற்றாக்குறை இருப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து புதிய மின்மாற்றிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டன. இதே போல, தொண்டி புதிய பேருந்து நிலையத்தில் உயா்கோபுர மின்விளக்கு திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் நவாஸ்கனி, சட்டப் பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் ஆகியோா் திறந்து வைத்தனா்.

இதில் தொண்டி பேரூராட்சித் தலைவா் ஷாஜகான் பானு, திருவாடானை ஒன்றிய குழுத் தலைவா் முகம்மது முக்தாா், திமுக ஒன்றியச் செயலா் ராஜாராம், நகா் செயலா் இஸ்மத் நானா, ஒன்றியப் பிரதிநிதி காளிதாஸ், மின்வாரிய செயற்பொறியாளா் சித்தி விநாயக மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments